சீரியஸான குடும்பக்கதைகளை எப்படிக்காமெடியாக கன்வெர்ட் பண்ணி சிரிக்க சிரிக்க கதை சொல்ல வேண்டும் என்ற உத்தியை தமிழ் சினிமாவில் வெற்றிகரமாகப் புகுத்தியவர் ஜனரஞ்சக இயக்குனர் கே பாக்யராஜ் . எல்லோரும் பேய்க்கதை என்றாலே பயந்த சமயத்தில் திகிலில் காமெடி என்ற அம்சத்தைப்புகுத்தியவர் காஞ்சனா புகழ் ராகவா லாரன்ஸ் .அது மாதிரி கேரள இயக்குனர் சிவபிரசாத் சீரியல் கில்லர் கதையில் காமெடி என்ற புது கான்செப்ட்டில் களம் இறங்கி இருக்கிறார்
8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் ரிலீஸ் ஆன முதல் ஆறு நாட்களில் 12 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது .தியேட்டர்களில் இடைவேளை வரை செம சிரிப்பு சத்தம் என்றாலும் இது எல்லோருக்குமான படம் அல்ல .அனைவராலும் ரசிக்க முடியாது .
ஈரோடு மகேஷ் , மதுரை முத்து போன்ற ஸ்டேண்ட் அப் காமெடியன்கள் வார இதழ்களில் மற்றவர்கள் எழுதிய ஜோக்ஸ்களை சொல்லும்போது வாசிப்பு அனுபவம் இல்லாதவர்கள் , சோசியல் மீடியாக்களில் அதிகம் புழக்கம் இல்லாதவர்கள் சிரிப்பார்கள் . ஆனால் ரெகுலராக பத்திரிக்கை படிப்பவர்கள் இது ஆல்ரெடி வந்த ஜோக் தானே? எதுக்கு இப்படி சிரிக்கறாங்க? என நினைப்பார்கள் .அதனால் கேரளாவில் ஹிட் என்பதால் தமிழர்களுக்கு இது பிடிக்கும் என சொல்லி விட முடியாது . இதை விடப்பிரமாதமான காமெடிப் படங்களை நாம் பார்த்து விட்டோம்
.சுந்தர் சி யின் உள்ளத்தை அள்ளித்தா மெகா ஹிட் .அதே காம்போவில் உருவான உனக்காக எல்லாம் உனக்காக செம காமெடியாக இருந்தபோதிலும் உ எ தா அளவுக்கு ஓடவில்லை
1991ல் கேரளாவில் வாழ்ந்த ஒரு சீரியல் கில்லரின் கதையைத்தான் எடுத்திருக்கிறார்கள் .கேரளாவில் கடைசியாக தூக்கு தண்டனை பெற்று இறந்தவன் இவன் .
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் ஒரு சீரியல் கில்லர் ,70 வயதான ஆண்களைக்கொல்வதுதான் அவன் வேலை . . கொலை செய்து விட்டு பிணத்தின் வாயில் வாழைப்பழத்தை வைப்பான் . இதனால் பனானா கில்லர் என அவனுக்குப்பெயர் இப்போது ஒரு ஆளை க்கொல்ல இருக்கிறான்
நாயகன் வேலை வெட்டி இல்லாதவன் . அவனால் ஊர் மக்களுக்கு ஒரே டார்ச்சர் . ஒரு காதலியும் உண்டு
போலீஸ் தேடும் சீரியல் சைக்கோ கில்லர் நாயகன் தான் என தவறாக நினைத்து அவனைக் கைதுசெய்கிறார்கள் , பின் உண்மை உணர்ந்து விடுதலை செய்து விடுகிறார்கள்
ஆனால் நாயகன் சீரியல் கில்லரோ என்ற பயத்தில் நாயகி பிரேக்கப் செய்து விடுகிறாள்
ஒரு பஸ் பயணத்தில் நாயகன் , வில்லன் , நாயகி , வில்லனின் அடுத்த டார்கெட் ஆன கொலை செய்யப்பட இருக்கும் ஆள் அனைவரும் பயணிக்கின்றனர்
இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக பஸீல் ஜோசப் வழக்கம் போல அசால்ட் ஆக நடித்திருக்கிறார் . கவுண்டமணி இருந்தால் அடேய் காரக்கொழம்பு மண்டையா என க கலாய்த்திருப்பார் .நடிப்பு சிறப்பு
வில்லன் ஆக ராஜீஷ் மாதவன் நடித்திருக்கிறார் .இவர் பல படங்களில் அஸிஸ்டெண்ட் டைரக்ட்டர் ஆகப் பணி ஆற்றியவர் . பயம் ஊட்டும் இடங்கள் , சிரிப்புக்காட்டும் இடங்கள் என எல்லாவற்றிலும் ஸ்கோர் செய்கிறார் , மிரட்டிடலான நடிப்பு
பஸ் கண்டக்டர் ஆக வரும் ஸுஜூ சன்னி , பஸ் டிரைவராக வரும் சுரேஷ் கிருஷ்ணா இருவரும் குணச்சித்திர நடிப்பில் கலக்கி இருக்கிறார்கள்
போலீஸ் ஆபீசர் ஆக வரும் பாபு ஆன்ட்டனி யின் உயரம் , உடல் மொழி , கம்பீரம் என அனைத்தும் அருமை
நாயகி ஆக அனிஷ்மா அனில்குமார் அதிக வாய்ப்பில்லை என்றாலும் வந்தவரை ஓகே ரகம்
கெஸ்ட் ரோலில் டொவினோ தாமஸ் வரும்போது அரங்கு அதிரும் கை தட்டல் . குரு சோமசுந்தரமும் ஒரு கேமியோ பர்பார்மென்ஸ் தந்திருக்கிறார்
பஸ் கண்டக்டர் ஆக வரும் ஸஜூ சன்னி தான் கதை ,வசனம் உதவி திரைக்கதை , .
இயக்கம் சிவபிரஸாத்
படத்தின் பெரும்பாலான காட் சிகள் இரவில் நடப்பதால் ஒளிப்பதிவாளர் நீரஜ் ரவிக்கு கூடுதல் பொறுப்பு . சரியாக செய்திருக்கிறார்
சாமன் சாக்கோ வின் எடிட்டிங்க் பக்கா . 141 நிமிடங்கள்
இசை ஜெ கே . பின்னணி இசை நல்ல விறுவிறுப்பு
சபாஷ் டைரக்டர்
1 காமெடியாக வரும் காட் சிகள் திகில் ஆக மாறுவது , சீரியஸ் ஆன சீன்களில் காமெடியைப்புகுத்துவது என ஸ்க்ரிப்ட் பக்கா
2 வில்லன் 5 லட்ச ரூபாய் டிமாண்ட் செய்தபோது வெறும் 6500 கொடுத்து சமாளிக்கும் சீன் செம காமடி .அது உள்ளத்தை அள்ளித்தா வேன் வாடகைக்குக்கூட கட் டாது காமெடிக்கு நிகர் (அதில் இருந்து உல்டாவா இருக்கலாம் )
3 பஸ்ஸை போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே நிறுத்தி விட்டு அந்த விஷயம் தெரியாமல் போலிஸுக்கு போன் பண்ணி சொல்லிடலாமா?என டிஸ்கஷன் செய்யும் இடம் செம
4 சுடு காட்டில் சினிமா ஷூட்டிங்க் நடக்கும் சீக்வன்ஸ் குட்
ரசித்த வசனங்கள்
1 அந்த நாய் இப்போ எங்கே?
வயசான ஆளை நாய் எனக்கூப்பிடலாமா?
யோவ் , நான் நிஜமான நாயைக் கேட் டேன்
2 நீங்க லேட் மேரேஜா?
இல்லை இல்லை , அரேஞ்டு மேரேஜ் தான்
3 என்னது ?மறுபடியும் அவர் செத்துட் டாரா?
4 உயிரோடு இருக்கும்போதும் இவனால் யூஸ் இல்லை ,இப்போ அவன் செத்த பின்பும் யூஸ் இல்லை
5 சீரியல் கில்லர் எப்போ என்ன செய்வான்? என யாராலும் கெஸ் பண்ண முடியாது
6 நான் உங்களை டிராப் செய்யவா?
வேணாம், நானே போய்க்கறேன்
அவரே அவரை டிராப் பண்ணிக்கிறாராம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 அந்த வயதான ஆள் பஸ்ஸில் நாயகியின் சீட்டுக்குப் பின் ஸீ ட்டில் அமர்ந்து நாயகியிடம் சில்மிஷம் செய்கிறான் .பஸ் சில் அத்த்னை ஸீட் காலியா இருக்கு . நாயகி எழுந்து வேறு சீட்டில் அமர்ந்திருக்கலாமே ?
2 பஸ் கண்டக்டர் உடைய அப்பா செண்ட்டிமெண்ட் ஒர்க் ஆகவில்லை , காரணம் அந்த அப்பா ஜொள் பார்ட்டியாக இருப்பதால்
3 பஸ் கண்டக்டர் சிறுவனாக இருந்த போது அப்பாவிடம் தாகமாக இருக்கு என்கிறான் .பீச்சில் செம கூட் டம். நீ இங்கேயே இரு , நான் போய் தண்ணீர் வாங்கி வருகிறேன் என போகிறார் அப்பா .ஆள் மிஸ்ஸிங்க் . இது மடத்தனமான சீன . மகனையும் அழைத்துக்கொண்டு கடைக்குப்போய் இருக்கலாமே?
4 மகளிர் மட்டும் , மதகஜராஜா ஆகிய படங்களில் ஒர்க் அவுட் ஆன டெட் பாடி காமெடி இதில் எடுபடவில்லை
5 டெட் பாடியை சுடுகாட்டில் புதைக்க வாய்ப்பிருந்தும் அதை செய்யாமல் சுற்றுவது ஏனோ ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மாறுபட் ட பிளாக் காமெடி படங்களை ரசிப்பவர்கள் பார்க்கலாம் . ரேட்டிங்க் - 2.75 / 5
Maranamass | |
---|---|
![]() Theatrical release poster | |
Directed by | Sivaprasad |
Screenplay by | Siju Sunny Sivaprasad |
Story by | Siju Sunny |
Produced by | Tovino Thomas Tingston Thomas Rapheal Pozholiparambil Thanzeer Salam |
Starring | Basil Joseph Rajesh Madhavan Siju Sunny Babu Antony Anishma Anilkumar Suresh Krishna |
Cinematography | Neeraj Revi |
Edited by | Chaman Chakko |
Music by | JK |
Production companies | Tovino Thomas Productions Rapheal Productions World Wide Films |
Release date |
|
Running time | 141 minutes |
Country | India |
Language | Malayalam |
Budget | ₹ 8 crore[1] |
Box office | est.. 10cr - 12 cr (6 days) |
0 comments:
Post a Comment