Sunday, April 13, 2025

KARMA (2025) -சவுத் கொரியன் வெப் சீரிஸ் - விமர்சனம் ( கிரைம் த்ரில்லர் ) @ நெட் பிளிக்ஸ்


 4/4/2025  முதல் நெட் பிளிக்ஸ்  தளத்தில்  வெளியான  இந்த சவுத் கொரியன்  வெப்  சீரிஸ்  விமர்சன ரீதியாக பலரின் பாராட்டுதல்களைப்பெற்றது . பொதுவாக  ஒரு வெப்  சீரிஸ்  பார்க்கும் நேரத்தில்   4  சினிமாப்படங்கள்  பார்த்து விடலாம் என்பதால்   நான்   வெப்சீரிஸ்களை  தவிர்க்கிறேன் . அதிகமா  டி வி சீரியல் பார்க்கும் பெண்களும் ,அதிகமா வெப்  சீரிஸ்  பார்க்கும் ஆண்களும்  அவங்க  டைமை  வேஸ்ட் பண்றாங்க என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு . நல்ல  விமர்சனங்கள்  வந்த  வெப்  சீரிஸ் களை  மட்டுமே  பார்க்கிறேன் 

மொத்தம் 6 எபிசோடு .320  நிமிடங்கள் ,தமிழ்  டப்பிங்கில் கிடைக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்

 சம்பவம் 1 - நாயகி  ஸ்கூலில்  படிக்கும்போது  பிரபல  பத்திரிகையில்  அட் டையில்  கவர் ஸ்டோரியாக வந்து விடுகிறாள் . இதில்  நாயகியின்தோழிக்குப் பொறாமை .  3 மாணவர்கள்  உன்னை பிளைன்ட்  டேட்  பண்ண அழைக்கிறார்கள் ,வா என அழைக்கிறாள்( பிளைன்ட்  டேட்  =  முகமூடி  அணிந்தவர்களுடன் டேட்டிங்க் போவது  அவர்கள் யார் என்பது தெரியாது )  . முதலில்  யோசித்த   நாயகி பின் சம்மதம் சொல்கிறாள் . தோழியின்  சதித்திட் டப்படி  அந்த  3 மாணவர்கள்  நாயகியை பாலியல் வன்கொடுமை செய்து விடுகிறார்கள் . பல   வருடங்கள்  கழித்து   நாயகி  இப்போது  டாக்டர்  ஆகப்பணி  புரிகிறார் . தன்  வாழ்வை   சீரழித்த  அந்த  3 பேரைப் பற்றி  விசாரிக்கிறாள்  . அவர்களில்  இருவர்   ஜெயிலில் , ஒரு ஆள் மட்டும் வெளியே . அவனைப்பழி  வாங்கத்துடிக்கிறாள் 


 சம்பவம்  2  - பச்சைக்கிளி முத்துச்சரம்  படத்தில்  வரும் ஜோதிகா மாதிரி  வில்லி  ஒரு  காதல் சதிகாரி . காதல் வலையில் யாராவது  சிக்குவார்களா? என பார்ப்பது , சிக்கினால் அவனுடன் நெருக்கமாக இருப்பது போல போட்டோ , வீடியோ  எடுத்து   அவனிடம் காட்டி மிரட்டுவது , பணம்  பறிப்பது  இதுதான்   வில்லியின்  தொழில் .அதற்கு  வில்லியின்  பாய் பிரண்டும் உடந்தை 


 சம்பவம்  3  . வில்லனுக்கு  ஏகப்பட்ட  கடன்  உண்டு , கடன் கொடுத்தவன்  ஒரு மாசம்  டைம் கொடுத்து அதற்குள்  கடனை அடைக்காவிடடால்  ஆளை க்ளோஸ்  பண்ணி விடுவோம் என மிரட்டியதால் பணத்தேவையில்  இருக்கிறான் . வில்லனின்  அப்பா  மிகப்பெரிய  தொகைக்கு  இன்சூரன்ஸ் எடுத்திருப்பதை த்தெரிந்த வில்லன்  தன அப்பாவையே  போட்டுத்தள்ள  முயற்சிக்கிறான் . வாடகைக்கொலையாளியை  ரெடி பண்றான் . வரும்  இன்சூரன்ஸ்  பணத்தில்  30%  கமிஷன் என  டீல் 


 மேலே   சொன்ன   மூன்று  சம்பவங்கள்  , நாயகி , வில்லி , வில்லன் , வில்லன் நெம்பர் 2 ,வில்லன் நெம்பர் 3  ஆகிய   5  பேருக்கும்  எப்படித்தொடர்பு  நிகழ்கிறது ?என்ன என்ன சம்பவங்கள்  நடந்தன  என்பது மீதி திரைக்கதை 


நாயகி ஆக   நடித்தவர்  டீன்  ஏஜ்  லுக்கில்  டாக்டர்  கெட்டப்  இரண்டிலும்  பால் மனம் மாறாத பாலகி ஆக இருக்கிறார் .நல்ல   நடிப்பு . வில்லி  ஆக   நடித்தவர்  ரொம்ப  கொடூரமாக  எல்லாம்  இல்லாமல்  சாதாரணமாக இருக்கிறார் . சுமாரான நடிப்பு . மெயின் வில்லனாக  வருபவர் , கொலையாளியாக  வரும்  சைனாக்காரன் , , வில்லி யின்   பாய்பிரண்ட்  , வில்லியிடம்  ஏமாறும்  அப்பாவி டாக்ட ர்  என  நான்கு பேர்  நடிப்பும்  சிறப்பு . இந்த  6 கேரக்ட்டர்களும் தான்  முழு வெப்சீரிஸையும் தாங்கிப்பிடிக்கின்றார்கள் 


 பின்னணி  இசை , ஒளிப்பதிவு  எடிட்டிங்க்  போன்ற   டெக்னிக்கல்  அம்சங்கள்  சிறப்பு 

சபாஷ்  டைரக்டர்


 1   கர்மா  என்பது  பூமாரங்க்   போல , கெடுவான் கேடு நினைப்பான் .  . நாம் செய்யும்  கெடுதல்கள்  நம்மையே  தாக்கும் என்ற  விஷயம் தான்  கதைக்கரு . கெட்டவர்கள்  அழிவார்கள்  என்ற  கருத்தை  சொன்ன விதம் குட் 


2   நான்  லீனியர்  கட்டில்    திரைக்கதை  அமைத்த    விதம் 


3   வில்லி   யார்   என்பது   தெரிய வரும் டிவிஸ்ட் , வில்லனை  ஆள் மாறாட் டம்   செய்து  மாட்டிக்கொள்ளும் இன்னொரு வில்லன்  போன்ற  ட்விஸ்ட்கள் அருமை 


 ரசித்த  வசனங்கள் 

1    என்  காண்டாக்ட்ல  இருக்கறவனுங்க எல்லாரும் என்னை விடப்பிச்சைக்காரனாக இருக்கிறார்கள் .


2   நீதான்  தறுதலைன்னு  பார்த்தா  உன்னை சுத்தி  இருக்கறவங்களும் அப்படித்தான் இருக்காங்க .


3   பழம்  விழுமா?ன்னு  பார்த்துட்டு   இருந்தா  கல்லடி  தான்  கிடைக்கும் .


4  ஆசைப்பட்டதை வாங்க  வக்கில்லைன்னா திருடவாவது கத்துக்கணும் .


5  தனக்குப்பிடித்தப்பெண்ணை வீழ்த்தத்தான் ஆண்கள் பணம் சம்பாதிக்கிறாங்க .


6  ஒரு நாள்   தான்   டைம் , மிஸ் ஆனா   நீ  மிஸ் ஆகிடுவே  !


7   நம்ம   தொழிலில்  கடைசி  வரை , காரியம்  முடியும்   வரை  கவனமாக இருக்கணும் 


8   ஒரு ஆள்   தன இயல்பை  மாற்றிக்கொண்டால் அவங்க சீக்கிரம் செத்துடுவாங்க  என்பது ஒரு ஐதீகம் 


9   எவ்ளோ  ஆழம் தான் தோண்டுவது ?இப்படியே தோண்டுனா பெட்ரொல்  கிடைக்கும் போலயே? 


10  டிடெக்டிவ்  தொழிலில்  கடின  உழைப்பு மட்டும் போதாது ,சோர்ஸ்  இருக்கணும் , அது நம்பகமா இருக்கணும்  


11   கர்மா   என்பது   உண்மையில் இருக்கு . செய்யும் தப்புக்கு தண்டனை உண்டு 


12  டிடெக்டிவ்  தொழில் செய்பவர்கள்  ராத்திரில எப்போ தூங்கி இருக்காங்க ? 

13  என்னை நிமிர்ந்து பார்க்கவே உனக்கு தைரியம் இல்லை , எப்படிக்கொல்லப்போறே ? 


14   நிறைய ஆம்பளைங்க பொட் டைப்பசங்களாவே  இருக்காங்க , நான் எதிர்பார்த்த மாதிரி  இருக்கும்  ஒரே ஆள் ஒரே ஆண்  நீ தான் 


15   ஜெயில்ல  இண்ட்டர்வ்யூக்கு   ஆள்   எடுக்கறாங்களா?   டீசண்ட்டா  டக் இன்  பண்ணி  இருக்கே? 



16   நீ   என் நண்பன் , அதனால  அதிகம் வலி இல்லாம சீக்கிரமா உன்னைக்கொன்னுட் டேன் 


17   அவசரப்படாதே , அவசரப்பட் டா  எல்லாத்தையும்  இழந்துடுவே 


18   கோழையான ஆண்கள்  கூட ஒரு  பெண்ணை  அனுபவிக்கலாம்னு சொன்னா வீரனா ஆகிடுவாங்க 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1    சாலையில்  நடக்கும் நபரை கார் மோதி கொல்வதுதான் டாஸ்க் . ஆள்   சாகவில்லை , மீண்டும் காரை ரிவர்ஸில்  விட்டபின்பும்  சாகவில்லை . இப்போ  குற்றுயிரும் குலை உயருமா இருக்கும் ஆளை  சும்மா ஒரு தட்டு தட்டினாலே செத்துடுவான் .அந்த   பேக்கு  வில்லன்  காரில்  அவனை  போட்டுக்கொண்டு போய் வேறு இடத்தில் புதைக்கப்போகிறான் , எவ்ளோ பெரிய  ரிஸ்க் ? வழியில்  போலீஸ்  செக்கிங்க்  வராதா? 


2  கொலைகாரன்  சிசிடிவி  தன்னைப்பார்ப்பதை அறிந்த பின்னும் அசால்ட் ஆக இருக்கிறான் 


3  டாக்டர்  தன்னிடம்  ட்ரீட்மெண்ட்டுக்கு வரும் அழகிய  பெண்களை எல்லாம் விட்டு விட்டு  அந்த பாடாவதி  வில்லி யிடம் மயங்குவது ஏனோ ? 


4 நாயகி  பழி வாங்க  15 வருடங்கள்  டைம்  எடுத்துக்கொள்வது எதுக்கு ? 


5  அப்பா  விபத்தில் இறந்து  போலீசில்  கேஸ்  விசாரணையில்  இருக்கும்போது   வில்லன்  இன்சூரன்ஸ்  ஆபீசில் போய் உடனடியாக பணம் வேண்டும் என தகறாரு செய்வது ஏனோ ?  டவுட்  வராதா?


6 மூன்று  மணி நேரத்தில் கிரிஸ்ப்   ஆக  முடித்திருக்கலாம் .இழுத்து  விட் டார்கள் 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- 18+   அடல்ட் கண்ட் டென்ட்  பெரிதாக  இல்லை என்றாலும்  கெட் ட  வார்த்தைகள் பேசும் காட் சிகள்  அதிகம் உண்டு , குடும்பத்துடன்  பார்க்க முடியாது 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - எல்லோரும்  சிலாகித்தபடி  இது ஒன்றும் ஆஹா ஓஹோ  அபாரம் பரிமளா  ரேஞ்ச்  எல்லாம் இல்லை . பார்க்கலாம் . ரேட்டிங்க்  3 / 5 


Karma
Promotional poster
Hangul
악연
Literal meaningIll-fated Relationship
Revised RomanizationAgyeon
McCune–ReischauerAkyŏn
GenreCrime thriller
Based onKarma
by Choi Hee-seon
Written byLee Il-hyung
Directed byLee Il-hyung
Starring
Music byHwang Sang-joon[1]
Country of originSouth Korea
Original languageKorean
No. of episodes6
Production
Running time47–61 minutes
Production companies
Original release
NetworkNetflix
ReleaseApril 4, 2025

0 comments: