A LEGEND (2024) -சைனீஸ் மூவி -- விஜயபுரி வீரன் -(2025) தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் பேண்ட்டஸி த்ரில்லர் )
50 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு பல மடங்கு லாபம் அள்ளிய ஜாக்கிசான் படம் இது .10/7/2024 அன்று சைனாவில் வெளியான இப்படம் இப்போது இங்கே தமிழ் டப்பிங்கில் ரிலீஸ் ஆகி உள்ளது .இது ஏற்கனவே ஜாக்கிசான் நடித்த த மித் (2005) , குங்க்பூ யோகா (2017) ஆகிய படங்களின் அடுத்த பாகம் எனக்கொள்ளலாம் .முந்தைய இரு படங்களைப்பார்க்காதவர்கள் கூட இப்படத்தைக்காணலாம்.கதை புரியும், தனிக்கதை தான்
நாசர் இயக்கிய தேவதை (1997) , டிவைன் லவ்வர்ஸ் (1997) , மகதீரா (2009) ஆகிய படங்கள் போல முன் ஜென்மக்கதை இக்காலக்கதையுடன் கனெக்ட் ஆகும் திரைக்கதை கொண்டது . கோட் படத்தில் விஜய் டி ஏஜிங்க் தொழில் நுட்பத்தில் இளமையாக வந்தது போல இதில் ஜாக்கிசான் அந்தக்கால இளைஞர் போல அழகாக வந்து போகிறார் . வழக்கமான ஜாக்கிசானின் ஆக்சன் காட்சிகள் கடைசி 20 நிமிடங்களில் பொறி பறக்கிறது
வாண்டுமாமா எழுதிய வீரப்பிரதாபன் கதைகளில் வருவது போல மாமூலான ஆக்சன் கதை தான் இது
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் ஒரு நாட்டின் இளவரசன் . .அவனுக்கு ஒரு தம்பி உண்டு .. அந்நாட்டின் தளபதி மகளை தனது இரண்டாவது மகனுக்கு அதாவது வில்லனின் தம்பிக்குப் பெண் கேட்கிறார் மன்னர் .ஆனால் தளபதி மறுக்கிறார் . இந்தக்காலம் போல அப்போது இல்லை . மாப்பிள்ளை குடிகாரன் , பொறுக்கி என்றால் பெண் தர மாட் டார்கள் . இதனால் கடுப்பான மன்னன் தளபதியைக்கொலை செய்து விடுகிறான் . வில்லன் அந்தப்பெண் மீது ஆசைப்பட்டு தன தம்பியையும், அப்பாவையும் கொலை செய்து தானே மன்னன் ஆகிறான் . தளபதியின் மகள் தான் நாயகி . அவள் தப்பி ஓடுகிறாள் . வில்லன் நாயகியைத்தன் பரிவாரங்களுடன் துரத்துகிறான்
நாயகன் வேறு ஒரு நாட்டின் படை வீரன் . குதிரைப்படை திரட்டும் பணியில் தன நண்பனுடன் இருக்கிறான் . அண்டை நாட்டின் தளபதி மகள் தான் நாயகி என்பது தெரியாமலேயே நாயகியை வில்லனிடம் இருந்து நாயகன் காப்பாற்றுகிறான் . நாயகனின் நண்பனுக்கு நாயகி மீது காதல் .ஆனால் நாயகிக்கு நாயகன் மீது காதல் நாயகியை மீட்க வில்லன் தன் படையுடன் நாயகனின் நாட்டின் மீது போர் தொடுக்கிறான் . இதற்குப்பின் நிகழும் சம்பவங்ககள் தான் மீதி திரைக்கதை
மேலே சொன்னவை எல்லாம் முன் ஜென்மக்கதை . அதே கேரக்ட்டர்கள் இந்த ஜென்மத்தில் உலா வருகின்றன . அந்தக்கதையோடு இந்தக்கதை எப்படி கனெக்ட் ஆகுது என்பது மீதி சுவாரசியம்
நாயகன் ஆக ஜாக்கிசான் ,நண்பனாக லே ஜாங்க் இருவரும் நடித்து இருக்கிறார்கள் . இளமையான ஜாக்கிசான் அருமை என்றாலும் இந்தக்கால ஜாக்கிசான் க்ளைமாக்சில் அதகளம் செய்கிறார் . இந்த வயதிலும் அவர் போடும் ஆக்சன் சீன்கள் அட்டகாசம் நாயகி ஆக குல்னசர் பெக்ஸ்ட்டியர் பெஸ்ட் டியர் என சொல்ல வைக்கும் அழகு .வில்லன் ஆக ஆரிப் அசத்தி இருக்கிறார்
ஜிங்கிள் மா தான் ஒளிப்பதிவு . கண்களில் ஒத்திக்கொள்ளலாம் போல அழகான பிரேம்கள் இசை மாதம் வாங். பின்னணி இசை அருமை . 129 நிமிடங்கள் படம் ஓடுகிறது , கிட் டத் தட் ட ஒரு தமிழ்ப்படத்தின் நீளம் தான் . திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர ஸ்டென்லி டாங்க்
சபாஷ் டைரக்டர்
1 பிரம்மாண்டமான போர்க்காட் சிகள் அசர வைக்கிறது
2 நாயகியின் அழகு , அவரது மார்ஷியல் ஆர்ட்ஸ்
3 க்ளைமாக்சில் ஜாக்கி சான் -ன் அதிரடி சண்டைக்காட் சி
4 வில்லனுக்கும்,, நாயகிக்கும் நடக்கும் வாள் சண்டை
ரசித்த வசனங்கள்
1 பெற்றோருடன் வாழும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது
2 பிறப்பிலேயே வாழ்க்கையைத்தொலைத்தவன் நான் , அதனால் வாழ்வைப்பற்றி சிந்திப்பதில்லை
3 ஆண்டவன் நமக்கு கொடுத்த உடலையும் , அழகையும் நாம தான் பாதுகாக்கனும்
4 ஒருவன் மரணத்தருவாயில் இருக்கும்போது அவன் இழக்க எதுவுமே இருக்காது
5 ராஜாக்கள் எப்போதும் வெள்ளைக்குதிரைகளைத்தான் பயன்படுத்தினார்கள்
6 காசு விஷயத்தில் கணக்குப்பார்க்கும் யாருக்கும் பெண் செட் ஆகாது
7 உன் வாழ்க்கையை அடுத்தவருக்கு அர்ப்பணித்து விடாதே
8 எல்லாரையும் கொன்னுட்டு தான் மட்டும் வாழலாம் என நினைப்பவன் சுயநலவாதி
9 நமக்கு வரக்கூடிய கனவுகள் மூளையின் செயல்பாடுகள் . ,வாழ்க்கைக்கும் கனவுக்கும் தொடர்பு இருக்கு
10 அவன் கிட் டே டைரக்டா என் காதலைப்பற்றி சொன்னேன் .அவன் என்னடான்னா இன்டைரக் டா அவனுடைய வேலையைப்பற்றி சொல்றான்
11 கனவுல ஒரு அழ கான பெண்ணைப்பார்த்தேன்
என்னை மாதிரி னு சொல்லு
எனக்குப்பொய் பேச வராது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகியின் அம்மாவின் முதுகின் மேல்புறம் அம்பு பட்டு அடுத்த நொடியே இறக்கிறார் .ஆனால் விஷ அம்பு பாய்ந்தும் நாயகன் இறக்கவில்லை
2 வில்லன் நாயகியைத்தூக்கிட்டு அல்லது கடத்திட்டுப்போகாம நாயகியின் அம்மாவைக்கடத்தறான் , பேக்கு
3 பொதுவா பொண்ணுங்க போட்டிருக்கும் செயின் அல்லது மாலையைக்கழட் ட லே ட் ஆகும் .இதுல நாயகி தொட் டவுடன் கையோட வருது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - CLEAN U
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - அம்புலிமாமா , பாலமித்ரா , பூந்தளிர் பத்திரிக் கை வாசகர்கள் , ஜாக்கிசான் ரசிகர்கள் பார்க்கலாம் .ரேட்டிங் 2.75 / 5
--
சென்னிமலை சி.பி. செந்தில்குமார்,
A Legend | |||
---|---|---|---|
Chinese name | |||
Traditional Chinese | 傳奇 | ||
Simplified Chinese | 传奇 | ||
| |||
Directed by | Stanley Tong | ||
Written by | Stanley Tong | ||
Produced by |
| ||
Starring | |||
Cinematography | Jingle Ma | ||
Music by | Nathan Wang | ||
Production companies |
| ||
Distributed by | Emperor Motion Pictures | ||
Release dates |
| ||
Running time | 129 minutes | ||
Country | China | ||
Language | Mandarin | ||
Budget | USD 50 million[2] |
0 comments:
Post a Comment