Monday, January 13, 2025

மதகஜராஜா (2025)- தமிழ் - சினிமா விமர்சனம் (காமெடி கிளாமர் மசாலா)

           


         மதகஜராஜா (2025)- தமிழ் - சினிமா விமர்சனம் (காமெடி கிளாமர் மசாலா)


படம் பார்த்த ரசிகர்களின் ஆரவாரமான கை தட்டலில் பாதி வசனங்கள் காதில் விழவே இல்லை.ஆனாலும் அனைவரும் கொண்டாட்டமாக வீடு திரும்புகிறார்கள்.பிரம்மாண்டமாக செலவு செய்து டப்பாப்படங்களை இயக்குபவர்கள், ஜாதி வெறிப்படங்களைத்தருபவர்கள்,வேண்டும் என்றே சோகத்தை வலுக்கட்டாயமாகத்திணிப்பவர்களுக்கு  இந்தப்படத்தின் வெற்றி ஒரு பாடம்.அதே சமயம் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம் பிடிக்கும் சந்தாநத்தை      ஒரு நொடியாவது யோசிக்க வைக்கும் படம் இது


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் ஒரு போலீஸ் ஆபீசரின் மகன்.ஒரு கேஸ் விஷயமாக ஒரு டுபாக்கூர் ரவுடியைத்தன் வீட்டில் தங்க வைக்க வேண்டிய சூழல் .அந்த ரவுடியின் மகளும் தங்குகிறாள்.நாயகன் ,நாயகி காதல் மலர இந்த ஒரு சிச்சுவேஷன் போதாதா?

நாயகன் தன் நண்பர்கள் நால்வருடன் ஸ்கூல் மாஸ்டரின் மகள் திருமண நிகழ்வுக்குப்போகிறார்.அங்கே நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் முதல் பாதிக்கதை.


நண்பர்கள் இருவர் வில்லனால் பாதிக்கப்படுகிறார்கள்.நாயகன் வில்லனை எப்படி முறியடிக்கிறார்? என்பது பின் பாதி காமெடிக்கதை.கூடவே இரு நாயகிகளின் கிளாமரும் உண்டு.மருந்துக்குக்கூட சோகக்காட்சிகளே இல்லை.

நாயகன் ஆக விஷால் ஜாலியாக. நடித்திருக்கிறார்.க்ளைமாக்சில் வில்லனுடன் போடும் சோலோ பைட்டில் எய்ட் பேக்ஸ் ஜிம் பாடி காட்டுகிறார்


இரண்டாவது நாயகன் ஆக காமெடி கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் சந்தானம்.டைவர்ஸ் கேட்கும் மனைவி,ஆகாவளி மாமியார் இவர்களுடன் அடிக்கும் லூட்டி கல கல


நாயகிகள் ஆக  அஞ்சலி,வரலட்சுமி என இருவர் .அருமையான கிளாமர்.

மகளிர் மட்டும் நாகேஷ் டெட்பாடிக்காமெடி டிராக் போல இதிலும் மனோபாலா காமெடி இருக்கு.செம.


மணிவண்ணன் நடிப்பும் அருமை.வில்லன் ஆக சோனு சூட் குட்.


திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர்  சுந்தர் சி.

விஜய் ஆண்ட்டனியின் இசையில் ஆல்ரெடி 3 பாடல்கள் மெகா ஹிட்.  ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு கண்களுக்குக்குளுமை.136 நிமிடங்கள் டைம் ட்யூரேசன்.


சபாஷ்  டைரக்டர்

1.  விஷால் ,அஞ்சலி காதல் மலரும் ஓப்பனிங சீன்

2. சந்தானம் ,அவர் சம்சாரம்,மாமியார் காமெடி டிராக் குட்

3. கிணற்றுக்குள் விஷால்,அஞ்சலி,வரு மூவரும் விழும் காட்சி அழகு அதன் பின். வரும் காமெடி டிராக் செம

4. மனோபாலா டெட் பாடி காமெடி டிராக்

5 சந்தாநத்தின். ஒன் லைனர் காமெடிக்கலக்கள்கள் 38



செம  ஹிட்  சாங்க்ஸ்

1.சற்று முன் இருந்த என்னில் உன்னைக்கண்ட பின்

2  சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு வண்டி

3'டியர் லவ்வரு. டியர் லவ்வரு நீ ஒரு


  ரசித்த  வசனங்கள் 

1 வாழ்க்கைல எதை ஜெயிக்கிறோம்கறது முக்கியம் இல்லை.எதுல ஜெயிச்சு வாழ்க்கையை ஜெயிக்கிறோம்கறதுதான் முக்கியம்

2. எவ்ளோ அழகாப்பேசி அக்யூஸ்ட் பொண்ண. நைசா அவனோட வீட்டுக்குத்தள்ளிட்டுப்போறான் பார்த்தியா?


3  ஒத்தப்பெண்ணைக்காப்பாத்திட்டு எம் ஜி ஆர்ஙகறியே?அப்போ நான் யாரு?சரோஜா தேவியா!?


4  கட்டுன பொண்டாட்டியை வாடி போடிநு. கூப்பிடாம. வதஙகுன கோழின்னா கூப்பிடுவாங்க?

5. அடல்ட்ஸ் ஒன்லி சாமியாரும் ,அடஙகாத மாமியாரும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை


6. முன்னே பின்னே நீ பொண்ணுங்களைப்பார்த்ததே இல்லையா?

முன்னே பார்த்தாச்சு.பின்னே இன்னும். பார்க்கலை


7 உன் மச்சினியை நான் சைட். அடிச்சுக்கறேன்.என் மாமியாரை நீ  பார்த்துக்க


8.   உங்களை. எல்லாம் குழந்தையா. இருந்தப்போ பார்த்தது.இப்போ உங்க கால குழந்தை

என்ன பண்றது? மேரேஜ் மட்டும்தான் பெரியவஙக பண்ணி வைக்கறாங்க.மத்ததெல்லாம் தானா நடந்துடுது.

9 கட்ன பெண்டாட்டி யை க்கை நீட்டி அடிக்கலாமா?

இதுக்காகக்கராத்தே கத்துக்கிட்டு வந்து கால் நீட்டி உதைக்க முடியுமா!?


10. கல்யாண வீட்டில். சாவு விழுந்தா. மேரேஜ் நின்னுடுமா? இது தான் சாக்குனு மாம்யாரைக்காலி பண்ணிடலாமா?


11. பாடில பல வகை இருக்கு.அவனுது. பைட் பண்ற. பாடி.என்னுது ரொமான்ஸ் பாடி.வேனும்னா உன். பொண்ணைக்கேட்டுப்பாரு

.12   ஆயிரம் தான் இருந்தாலும் உன் சம்சாரம் சப்பை பிகருதான்


டேய்


பிரண்ட். சம்சாரத்தை ரசிச்சாதான் தப்பு.திட்டுனா. தப்பில்ல


13  நம்மால முடியுமா? என நினைப்பதை விட நம்னால முடியலைனா. வேற

யாரால். முடியும்னு நினைப்போம்


14.  சென்னை ல பாதிப்பேரு வாழ்க்கையைத்தொலைத்தவர்கள்.மீதிப்பேரு நிம்மதியை. தொலைத்தவர்கள்


15. வேண்டும் என சொல்லும். பெண்ணை விட நம்மை வேண்டாம்னு சொல்ற பொண்ணுதான் சீக்கிரம் கிடைக்கும்


16 நல்ல. நேரம். பார்த்தாச்சா?


உலகம். சுற்றும். வாலிபன் கூடப்பாத்தாச்சி


17  கம்முனு. இருந்த காலநில கும்முனு ஒரு. பிகரு


18 எத்தனை பசஙகளை. நாய் மாதிரி அலைய விட்டிருப்பா நாய் அவளைத்துரத்துனா என்ன ?


19 நான் பார்க்கத்தான் கோமாளி.நிஜத்துலபேமானி


20. கிணத்துல விழுந்துட்டேன்


அது எப்படி விழும்போது ரெண்டு பொண்ணுங்களையும் கூட்டிட்டுப்போய் விழுந்தே?


21.கயிறை எடுத்துப்போடு


நீ நூல் விடுவே.நான் கயிறு விடனுமா?


22 மேல யாரும் இல்ல


கீழே யும். யாரும். இல்லை


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


காமெடிப்படத்துல எதுக்கு லாஜிக் பார்க்கனும்?அஞ்சலி,வரலட்சுமியப்பார்க்கவே டைம் பத்தல




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - மதகஜராஜா(2025)- தமிழ் -13 வருடங்களுக்கு முன் வர வேண்டிய படம்,லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக ஹிட் அடித்திருக்கிறது.முதல் பாதி சந்தானத்தின் கலக்கல் காமெடி +மனோபாலா,மணிவண்ணன் பிரமாதமான நடிப்பு+விஷாலின் எய்ட் பேக்ஸ் உழைப்பு ,பின் பாதி மாமூல் மசாலா.பி ,சி செண்ட்டர்களில் பின்னிப்பெடல் எடுக்கும்

விகடன் மார்க் 45. ரேட்டிங். 3.25. / 5

0 comments: