Monday, January 13, 2025

வணங்கான்(2025)- சினிமா விமர்சனம் (ரிவஞ்ச் ட்ராமா)

                   


வணங்கான்(2025)- சினிமா விமர்சனம் (ரிவஞ்ச் ட்ராமா)


இயக்குனர் பாலா வின் சரித்திரத்தைப்புரட்டிப்பார்த்தால்  அவரது முதல் படமான. சேது(1999),3 வது படமான. பிதா மகன் (2003 )    இரண்டுமே ரசிகர்களால்,விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட படஙகள்.கமர்சியல் வெற்றியும் பெற்றவை.இரண்டாவது படமான நந்தா (2001) விமர்சன ரீதியாகப்பாராட்டுப்பெற்றாலும் ,சூர்யாவுக்குப்புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தினாலும் பிரம்மாண்ட வெற்றி இல்லை.4 வது படமான நான் கடவுள் (2009),6 வது படமான பரதேசி (2013) இரண்டுமே பல விருதுகளைப்பெற்றாலும்,விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும்  கமர்சியல் சக்சஸ் பெறவில்லை.5 வது படமான அவன் இவன் (2011) ,7 வது படமான தாரை தப்பட்டை(2016) ,8 வது படமான. நாச்சியார் (2018) மூன்றுமே டப்பாப்படங்கள்.9 படமான வர்மா(2020) வெளிவரவே இல்லை.தயாரிப்பாளருக்கே பிடிக்கவில்லை.இது பாலா வுக்கு பத்தாவது படம்.



திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாததால் பெரிய ரீச் இல்லாத நாயகன் அருண் விஜய்.முறைமாப்பிள்ளை (1994) மூலம் சினிமாவுக்குள் வந்தவரின் கவனிக்கத்தக்க படஙகள். பாண்டவர் பூமி(2001),இயற்கை(2003),தடையறத்தாக்க (2012),தடம்(2018),மிஷன் சேப்டர் 1(2024)


இவர்கள் இருவரின் காம்போவில் வந்திருக்கும் படம் கமர்ஷியலாக ஹிட் தான்

ஸ்பாய்லர்  அலெர்ட்

பிதாமகன் விக்ரம் கேரக்டர் போலவே இப்படத்தின் நாயகனும் காது கேளாத ,வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி.பெற்றோர் இல்லை.ஒரு தங்கை உண்டு.


நாயகி டூரிஸ்ட் கைடு.நாயகனை. சுற்றி சுற்றி வருபவர்.இவர்களை சுற்றியே முதல் 50 நிமிடஙகள் திரைக்கதை கலகலப்பாய் நகர்கிறது.52 வது நிமிடத்தில் மெயின் கதை தொடங்குகிறது.


விழி ஒளி இழந்த பெண்களுக்கான விடுதியில் மூவர் புகுந்து பெண்கள் பாத்-ரூமில் குளிக்கும்போது பார்த்து ரசிக்கின்றனர்.விஷயமறிந்த நாயகன் மூவரில் இருவரைகோடூரமாகத்தாக்கிக்கொலை  செய்கிறான்.போலீஸ் விசாரனையில் தானாக முன் வந்து சரண் அடைகிறான்.


மூன்றாவது குற்றவாளி என்ன ஆனான்? நாயகனுக்கு என்ன தண்டனை கிடைத்தது என்பது மீதி திரைக்கதை


நாயகன் ஆக அருண் விஜய் பிரமாதமாக நடித்துள்ளார்.வசனமே பேசாமல் ஆடியன்சைக்கவர்கிறார்

கீர்த்தி ஷெட்டி ,ரோஷினி பிரகாஷ,மமிதா பைஜூ ,மிஷ்கின்,சமுத்திரக்கனி உட்பட அனைவரது நடிப்பும் அருமை


பாடல்களுக்கான இசை ஜி வி பிரகாஷ். குமார்.பரவாயில்லை ரகம்.பின்னணி இசை. சாம் சி எஸ்.குட்.சதீசின் எடிட்டிங் கில் படம் 2 மணி நேரம் ஓடுகிறது.ஒளிப்பதிவு குருதேவ்.குட் ஒர்க்

சபாஷ்  டைரக்டர்

1 ஜட்ஜ் ஆக வரும் மிஷ்கின் கேரக்டர் டிசைன்,அவர் நடிப்பு,அவர் வரும் காட்சிகள் அனைத்தும் கலக்கல் ரகம்


2 விசார்ணை அதிகாரி ஆக வரும் சமுத்திரக்கனியின் உடல் மொழி, கம்பீரம் ,தோற்றம் செம


3 நாயகனின் தங்கையாக வருபவர் நடிப்பு,நாயகி,நாயகன் அனைவர் நடிப்பும் ரசிக்க வைத்தன







  ரசித்த  வசனங்கள் 

1. எந்தக்குறையுமே இல்லாத உங்களால எங்களை மாதிரி குறை உள்ளவங்க பிரச்சனைகளைப்புரிந்துகொள்ள முடியாது


2 நான் சொல்வதை எச்சரிக்கையாகவும். எடுத்துக்கலாம்.வேண்டுகோளாகவும் எடுத்துக்கலாம்.


3 யாரம்மா நீங்க? எங்கே போறீங்க? யாரைபார்க்கனும்?

ஏக் காவ் மே ஏக் கிசான் ரஹதா த்தா


ஒக்கே மேடம்.நீங்க போகலாம்

4 டாக்டர்.ஆரம்பிக்கலாமா?


இது என்ன பாஸ்ட் புட் கடையா?


5. சண்டைன்னா கட்டிப்புரண்டு சண்டை போட வேணாமா? ஒரு கிக்கே இல்லை.


6. விவேகானந்தர் எந்தப்பாறையில் நின்று தன் உரையை நிகழ்த்தினார்?


திஸ் ராக்?


எஸ்.யூ ராக்ஸ்


7 அவரு பார்க்க. சிவாஜி மாதிரி இருந்தாருஙக.அதனால நடிக்கிறார்னு நினைச்சுட்டேன்


8 ஓஹோ.முன். கோபக்காரனா. இருந்தா போலீஸ் ஸ்டேசன்ல பைட் போடுவியா?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 125 நிமிடப்படத்தில் முதல் பாதி. வரை மெயின் கதைக்கே வரவில்லை

2 வில்லனின் கேரக்டர் வலுவாக அமைக்கப்படவில்லை

3 கொடூரக்கொலைகள் செய்த நாயகனை ஜாமீனில் எப்படி விடுகிறார்கள்?ஜாமீன் தொகை கட்டும் அளவு அவருக்கு வசதி இல்லை.

4 கொலைக்கான காரணத்தை பெண்கள் நலன் கருதி நாயகன் சொல்ல மறுக்கிறான்.ஆனால் திரும்பத்திரும்ப சொல்லு சொல்லு என எல்லோரும்வற்புறுத்துவது போர்.ஒரு கட்டத்தில் எரிச்சல்

5 க்ளைமாக்ஸ் சோகம் வலியத்திணிக்கப்பட்டது

6. பிராமணப்பெண்களை நாயகி மட்டம் தட்டும் காட்சி தேவை இல்லாதது.அதே போல் திருநங்கை களை சித்திரவதை செய்யும். காட்சி  திணிப்பு


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+


கொடூரமான வன்முறை



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் .ஆண்கள் பார்த்து ரசிப்பார்கள்.விகடன் மார்க் 43. ரேட்டிங் !/2.75 /5

0 comments: