Monday, October 21, 2024

பிளாக் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( சயின்ஸ் பிக்சன். ஹாரர். திரில்லர்)

 


பிளாக் (2024) - தமிழ்- சினிமா விமர்சனம் ( சயின்ஸ் பிக்சன் ஹாரர் த்ரில்லர்)



டைம் டிராவல் படங்கள் /டைம் லூப் மூவிஸ் அல்லது சயின்ஸ் பிக்சன் படஙகள் தமிழில் வந்தவை எவை என ஒரு லிஸ்ட் எடுத்தால். 12பி (2001) ,இன்று நேற்று நாளை (2015),ஓ மை கடவுளே(2020),மாநாடு (2021) என வெகு சில படங்கள் தேறுகின்றன.


Coherence(2013) ஹாலிவுட் படத்தின் அபிசியல் ரீ மேக் என சொல்லப்பட்டாலும் தமிழ் ரசிகர்களுக்குப்புரியும்படி எளிதாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.ஒரிஜினல் வெர்சனில் பல கேரக்டர்கள்.அப்படியே தமிழில் எடுத்தால் குழப்பம் வரும் என்பதால். ஒரே ஒரு ஜோடி மட்டும் 80% படத்தில் வருவது போலக்காட்சிகள்


இது போக படத்தின் சில காட்சிகள்  Vivarium (2019) படக்காட்சிகள் போல இருக்கின்றன என பலர்  சொல்கிறார்கள்.குறிப்பிட்ட அந்த இரு படங்களை யும் நான் பார்க்கவில்லை


ஸ்பாய்லர் அலெர்ட்


சம்பவம் 1 - வில்லனின் காதலிக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் ஆகிறது.காரில் தம்பதி பயணிக்க கார் டிரைவராக வில்லன்.என்னை விட்டுட்டு வேற ஒருத்தனைக்கட்டிக்கிட்டியா?என கருவிக்கொண்டே வருகிறான்.வில்லன் தம்பதியைக்கொல்ல முயலும்போது ஏற்கனவே யாரோ கொன்றதைக்கண்டு திடுக்கிடுகிறான்.கொன்ற உருவம் திரும்பிப்பார்க்கும்போது முகத்தைபார்க்கிறான்.அது வேறு யாரும் அல்ல.வில்லனே தான்.வில்லனுக்குக்குழப்பம்.



சம்பவம் 2.  நாயகன்,நாயகி. இருவரும் காதலித்துத்திருமணம் செய்து கொண்டவர்கள்.ஒரு நாள் ஜாலி ட்ரிப்பாக இவர்கள் வாங்கி வைத்திருக்கும் வில்லாவுக்குப்போகிறார்கள்.அங்கே வேறு யாருமே இல்லை என சொல்லப்பட்டாலும் எதிர் வீட்டில் விளக்கு எரிவதைபார்த்துக்குழப்பம் அடைகிறார்கள்


அந்த வீட்டில் அவர்கள் தங்களைத்தாஙகளே கண்ணாடியில் பார்த்துக்கொண்டதைப்போல்  அதே சாயலில் பார்த்துக்குழப்பமும் அதிர்ச்சியும் அடைகிறார்கள்

சம்பவம் 3. நாயகி ஒருகட்டத்தில் போலீசுக்குக்கால் பண்ணி அபாயம், உடனே வரவும் என சொல்ல போலீஸ் அங்கே ஆஜர்.அங்கே நாயகன் மட்டும்.நாயகி இல்லை.சந்தேகக்கேசில் போலீஸ் நாயகனைக்கைது செய்கிறது


இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் ,மேலே சொன்ன 3 சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு ? என்பது மீதி திரைக்கதை


நாயகன் ஆக ஜீவா அருமையான நடிப்பு.முன் கோபம் கொண்ட இளைஞன் ஆக அவருக்கு அல்வா சாப்பிடுவது போன்ற கேரக்டர்.தன்னைப்போலவே இன்னொரு ஆளைப்பார்த்துக்குழம்புவது அருமை


நாயகி ஆக பிரியா பவானி சங்கர்.ராசி இல்லாத நடிகை என்ற அவப்பெயரை இப்படத்தின் வெற்றி மூலம் போக்கி விடுவார்.தன் காதல் கணவன் முரடன் என்பதில் காட்டும் எரிச்சல் ,தன் தோழியுடன் தொடர்பு இருக்குமோ? என சந்தேகப்பட்டுப்பிரிவது என அழுத்தமான பாத்திரம்.உணர்ந்து நடித்திருக்கிறார்

வில்லன் ஆக  விவேக் பிரசன்னா கச்சிதம்.போலீஸ் ஆபீசர் ஆக யோக் ஜேபி எகத்தாளமான பார்வை ,தெனாவெட்டான உடல் மொழியுடன் நன்றாக நடித்திருக்கிறார்


திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் பாலசுப்ரமணி.

பின்னணி இசை சாம் சி எஸ்.திரில்லர் படஙகளுக்கே உரித்தான பி ஜி எம் செம.ஒளிப்பதிவு ஒரு திகில் படத்துக்கு எப்படி இருக்க வேண்டும் என எடுத்துரைக்கிறது

பிலோமின் ராஜின் எடிட்டிஙகில்  படம் 2 மணி நேரம் விறுவிறுப்பாகப்போகிறது

சபாஷ். டைரக்டர்

1 கதை இன்ன மாதிரிதான் போகும் என்பதை விளக்க ஓப்பனிங சீனிலேயே ஒரு முன் கதையை சொன்ன விதம்

2. குவாண்ட்டம் பிசிக்ஸ் , பேரலல் ரியாலிட்டி , பெர்முடா ட்ரை ஆங்கிள் ,என சி செண்ட்டர் ரசிகர்களுக்குப்புரியாத சமாச்சாரங்களை முடிந்தவரை எளிமையாகச்சொன்ன விதம்

3. பூமிக்கு அருகே நிலா வரும் ஒரு அபூர்வமான பவுர்ணமி இரவில் முழுக்கதையும் நடப்பதாக சித்தரிப்பது


ரசித்த வசனங்கள்

1.  என் வாழ்க்கையில் ஏற்பட்ட முதல் தோல்வி நீ தான்

2. எல்லாக்காதல் கதைகளும் கலர்புல்லா ,ஸ்வீட்டாதான் ஆரம்பிக்கும்


3. மத்தவங்க என்ன நினைப்பாங்களோன்னு பயந்து பயந்து நாம் நமக்கான. வாழ்வைத்தொலைத்து விடக்கூடாது

4.  மேரேஜ் ஆகி 7 வருடங்களுக்குள். மனைவிக்கு ஏதாவது நடந்தாலோ,மனைவி காணாமல் போனாலோ கணவன் தான் முதல் சஸ்பெக்ட்

லாஜிக் மிஸ்டேக்ஸ்


1. போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த வீட்டில்  ஏதோ சத்தம் வருது,என்ன? எனப்பாருங்க என சொன்னதும் அனைத்து கான்ஸ்டபிள்களும் கைதியாகபிடித்து வைத்த நாயகனை அம்போ என விட்டு விட்டு அப்படியா  செம்மறி ஆட்டுக்கூட்டம் போல கிளம்புவாஙக?2 பேராவது ஸ்பாட்டில் கைதி கூட இருக்க வேண்டாமா?

2. நாயகனின் முன்னாள் காதலி/ தோழி ஒரு எதிர்பாராத சந்திப்பில் நாயகனை அணைத்து முத்தமிட முயலும்போது நாயகன் காட்டும் அதீத எதிர்ப்பு நம்பும்படி இல்லை.அப்படி எல்லாம் யோக்கிய சிகாமணிகள் இருக்கிறார்களா? என்ன?


அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்.  - யு


சி பி எஸ். பைனல் கமெண்ட் - மாறுபட்ட திரில்லர் மூவியை ரசிப்பவர்கள் பார்க்கலாம்.விகடன் மார்க். 44. குமுதம் ரேங்க்கிங் - நன்று.

மை ரேட்டிங். 3/5

0 comments: